SuperTopAds

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான விசேட அறிவிப்பு! தங்க நகைகளை எடுத்துவர நிபந்தனை, மீறினால் சட்ட நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான விசேட அறிவிப்பு! தங்க நகைகளை எடுத்துவர நிபந்தனை, மீறினால் சட்ட நடவடிக்கை..

இலங்கைக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் 22 கரட்டுக்கு அதிக தரத்திலான தங்க ஆபரணங்களை அணிந்து வருவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது. 

மேற்படி தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

விமானப் பயணிகள் அணியும் தங்க ஆபரணங்களுக்கு தரம் அல்லது வரம்பு இல்லை என்ற அனுமதியைப் பயன்படுத்தி, 

நாளாந்தம் சுமார் 50 கிலோ தங்கத்தை கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில கடத்தல்காரர்கள் நாளாந்தம் தயாரிக்கப்பட்ட 24 கரட் தங்க ஆபரணங்களுடன் அருகிலுள்ள நாடுகளுக்கு வருவதால், 

மாதத்திற்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை நாடு இழக்க நேரிடுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை வழங்கினார்.

இதன் பிரகாரம், உரிய அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர் 

தேவையில்லாமல் தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு இலங்கைக்கு விமானப் பயணிகளாக வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி, தங்க ஆபரணங்களின் தரம் மற்றும் அளவுகளை கண்டறிய விசேட தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்துமாறு சுங்க அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கோ அல்லது சாதாரண விமானப் பயணிகளுக்கோ இந்த தீர்மானம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.