SuperTopAds

இலங்கை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உடல் உறுப்பு திருட்டு! விசாரணைகள் ஆரம்பம், பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பாம்..

ஆசிரியர் - Editor I
இலங்கை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உடல் உறுப்பு திருட்டு! விசாரணைகள் ஆரம்பம், பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பாம்..

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற உடல் உறுப்புக்கள் திருட்டு சம்பவம் அம்பலமாகியுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரி ஒருவரும் இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. 

இந்நிலையில் குறித்த தனியார் வைத்தியசாலையில் உடல் உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்த சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கை எடுத்திருக்கின்றது. 

சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விசாரணைகள் நேற்றுமுன்தினம் (25) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறுநீரகம் வழங்கியவர்கள் 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதேவேளை, சிறுநீரகக் கடத்தலுக்கு உதவிய பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் சுகயீன விடுமுறையில் சென்று இதுவரை பணிக்கு திரும்பவில்லை என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

குறித்த அதிகாரி மீது இதற்கு முன்னரும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவரை பணிநீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.