உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர்!! -முதலாவது அணியாக வெளியேறுகிறது வரவேற்பு நாடான கத்தார்-

ஆசிரியர் - Editor II
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர்!! -முதலாவது அணியாக வெளியேறுகிறது வரவேற்பு நாடான கத்தார்-

2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடரில், போட்டியை நடத்தும் கட்டார் கால்பந்தாட்ட அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

காட்டார் அணி தான் சந்தித்த முதல் போட்டியில் ஈக்வடாரிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. உலகக்கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தமை இதுவே முதன்முறையாகும்.

இதையடுத்து 2 ஆவது லீக் சுற்றில் செனக்கல் அணியை எதிர்கொண்ட கட்டார் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இதனைத்தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்கிழமை நெதர்லாந்து அணியை கட்டார் அணி எதிர்கொள்கிறது.

எனினும், முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் குழு 'ஏ' புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ள கட்டார் அணி, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததுடன், உலகக் கிண்ணத் தொடரிலும் இருந்து வெளியேறியுள்ளது.

இது கட்டார் உதைப்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு