ஜெர்மனியை வீழ்த்திய மகிழ்ச்சி!! -முழு மைதானத்தையும் சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
ஜெர்மனியை வீழ்த்திய மகிழ்ச்சி!! -முழு மைதானத்தையும் சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்-

உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடரில் ஜெர்மனியை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜப்பான் அணியின் ரசிகர்கள் மைதானம் முழுவதையும் சுத்தம் செய்துள்ளனர். 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

இதே போல நேற்று நடந்த போட்டியில் 4 முறை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி 1-2 என்ற கோல் கணக்கில் மற்றொரு ஆசிய அணியான ஜப்பானிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

ஜப்பானின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கலீபா சர்வதேச மைதானத்தில் இருந்த அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடினார்கள். கோல் அடித்த போது மைதானத்தில் ஏராளமான பாட்டில்கள் வீசப்பட்டது.

போட்டி முடிந்து வெளியே செல்லும் முன்பு ஜப்பான் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர். ஜப்பான் ரசிகர் ஒருவர் குப்பைகளை எடுத்து நீலநிற கழிவு பைகளில் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

இதையொட்டி ஜப்பான் ரசிகர்களை சர்வதேச கால்பந்து சம்மேளனம் பாராட்டி உள்ளது. 2018 உலக கோப்பையில் 2 ஆவது சுற்றில் ஜப்பான் 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோற்றது. அப்போதும் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு