கனடாவில் மனைவியை வெட்டிக்கொலை செய்த இலங்கை தமிழர்!! -விசாரணையில் புதிய திருப்பம்-

ஆசிரியர் - Editor II
கனடாவில் மனைவியை வெட்டிக்கொலை செய்த இலங்கை தமிழர்!! -விசாரணையில் புதிய திருப்பம்-

கனடாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் மீதான வழக்கு விசாரணை  நேற்று ஆரம்பமாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி சசிகரன் தனபாலசிங்கம் என்பவர் பிரிந்து வாழ்ந்து வந்த தன் மனைவி தர்ஷிகா ஜெகன்நாதன் என்பவரை வாளால் வெட்டி கொலை செய்திருந்தார்.

இதனையடுத்து சசிகரன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் ஒன்றாறியோ நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய காணொளி காட்சி நேற்று நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது மன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், செப்டம்பர் 11, 2019 அன்று மாலை 6:15 மணியளவில் நடந்த கத்திக் குத்துத் தாக்குதல் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. அந்த காணொளியில் தர்ஷிகாவை கொலை செய்தது தனபாலசிங்கம் என்று நீதிமன்றம் மற்றும் அரச தரப்பினரால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தனபாலசிங்கம் குறித்து தடயவியல் மனநல மருத்துவரின் மதிப்பீட்டிற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் டாம் பிட்மேன் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு