இலங்கை அணிக்கு அடுத்த சோகம்!! -சாமிக்கவுக்கு போட்டித்தடை-

ஆசிரியர் - Editor II
இலங்கை அணிக்கு அடுத்த சோகம்!! -சாமிக்கவுக்கு போட்டித்தடை-

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட  ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடை விதித்துள்ளது.

அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கு அமைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான குற்றத்தை சாமிக்க கருணாரத்ன ஒப்புக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடைக்கு மேலதிகமாக, சாமிக்க கருணாரத்னவுக்கு 5000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள இரவு விடுதியொன்றில் மோதலில் ஈடுபட்டதாக சாமிக்க கருணாரத்ன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு