மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதல் -உக்ரேனின் குழந்தை பலி-

ஆசிரியர் - Editor II
மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதல் -உக்ரேனின் குழந்தை பலி-

உக்ரேனின் நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள  மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

சபோரிஜியா பகுதியில் உள்ள வில்னியான்ஸ் என்ற நகரின் உள்ள குறித்த வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டது என உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்து ஒரு சில நிமிடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றது.  வைத்தியர் ஒருவரும் கட்டட இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என  உக்ரேன் மேலும் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட வைத்தியசாலை உள்ள பகுதியை நோக்கி ரஷ்ய படையினர் பாரிய ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டனர் என உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு