பிணை எடுப்பதற்கு ஆட்கள் இல்லாததால் 18 வருடங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் இருந்த சந்தேகநபருக்கு பிணை!
பிணை எடுப்பதற்கு ஆட்கள் இல்லாததால் சுமார் 18 வருடங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொலைச் சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யபட்டபந்தி பிணை வழங்கியுள்ளார்.
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பணிப்பாளர் சகுந்தலா கருணாசிங்கஇ பந்துல கமராச்சி மற்றும் லக்மினி அமரசிங்க ஆகியோர் முன்னிலையில் சந்தேக நபருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய சந்தேக நபர் ஜேம்ஸ் அன்டனி லோரன்ஸ் என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.