தோல்வியால் மனது வலிக்கிறது!! -வருந்தும் மெஸ்சி-

ஆசிரியர் - Editor II
தோல்வியால் மனது வலிக்கிறது!! -வருந்தும் மெஸ்சி-

32 வருடங்களுக்கு பின்னர் அர்ஜென்டினா உலக கோப்படை ஆரம்ப போட்டியில் தோல்வியை சந்தித்தது மனது வலிக்கின்றது என்று அர்ஜென்டினா அணித்தலைவர் மெஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த போட்டியில் எவருமே எதிர் பார்க்காத வகையில் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி மிகுந்த வருத்தம் அடைந்தார். தோல்விக்கு பின்னர் அர்ஜென்டினா அணித்தலைவரான அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சவுதி அரேபியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய அடியாகும். இந்த தோல்வியால் மனது வலிக்கிறது. 2 ஆவது பாதி ஆட்டத்தில் 5 நிமிடங்கள் செய்த தவறு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. 1-2 என்ற கோல் கணக்கில் பின் தங்கிய பிறகு அதில் இருந்து மீள்வது கடினமாகி விட்டது.

சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் பந்தை நன்றாக நகர்த்தி செல்கிறார்கள். இந்த தோல்வியை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

நாங்கள் கடினமாக போராடினோம். அதே நேரத்தில் தோல்விக்கு சாக்குகள் எதுவும் கூற விரும்பவில்லை. நாங்கள் முன்பை விட ஒருங்கிணைந்து விளையாட இருக்கிறோம். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். மெக்சிகோவை வீழ்த்த முயற்சிப்போம் என்றார். 

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு