மன்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து வெளியேறினார் ரொனால்டோ

ஆசிரியர் - Editor II
மன்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து வெளியேறினார் ரொனால்டோ

போர்த்துகல் நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து வெளியேறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடன் அமுலுக்கு வரும் வகையில் ரொனால்டோ வெளியேறுகிறார் என மன்செஸ்டர் யுனைடெட் கழகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. பரஸ்பர இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவர் வெளியேறுகிறார்எனவும் அக்கழகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

மன்செஸ்டர் யுனைடெட் கழகத்துக்காக இரு ஒப்பந்த காலங்களில் விளையாடி, 346 போட்டிகளி; 145 கோல்களை அடித்த ரொனால்டோவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அவரினதும் அவரின் குடும்பத்தினரதும் எதிர்காலத்துக்காக வாழ்த்து தெரிவிப்பதாகவும் அக்கழகம் தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு முன்னதாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ அளித்த செவ்வியொன்றில், மன்செஸ்டர் கழகத்திலிருந்து தான் விலக நிர்ப்பந்திப்பதற்கு உயர் அதிகாரிகள் பலர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார். 

கழகத்தின் முகாமையாளர் எரிக் டென் ஹக் தன்னை மதிப்பதில்லை எனவும் அதனால் தானும் அவருக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் ரொனால்டோ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு