வேலியால் புகுந்து பாடசாலைக்குள் சென்ற 4 மாணவர்கள் மீது சந்தேகமடைந்த பொலிஸாருக்கு விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி..!
பாடசாலையின் பிரதான வாயிலால் பாடசாலைக்குள் செல்லாமல் வேலியால் புகுந்து பாடசாலைக்குள் சென்ற 4 மாணவர்கள் மீது சந்தேகமடைந்த பொலிஸார் அவர்களின் புத்தக பையை சோதனையிட்டபோது அதனுள் போதை மாத்திரைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த சம்பவம் கேகாலை நகரப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது. மேலும் மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களுக்கு போதை மாத்திரை விநியோகம் செய்த 21 வயதான போதைப் பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,செவ்வாய்க்கிழமை காலை நேரம் கேகாலை நகர பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு நான்கு மாணவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அம்மாணவர்கள் ஒரு இளைஞனுடன் பேசிக் கொண்டு வந்ததையும் பாடசாலையின் பிரதான வாயிலால் உட் செல்லாது பாடசாலை வேலி ஒன்றினுள் உட்புகுந்து சென்றதையும் அவதானித்துள்ளார்.
இதன் காரணமாக பாடசாலை நிர்வாகத்திற்கு சம்பவத்தை தெரியப்படுத்தி ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் அவர்களது பாடசாலைப் பையை பரிசோதித்துள்ளனர். அப்போது ஒரு மாணவனின் பாடசாலைப் பையில் இருந்து 5 போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மாணவர்களது பெற்றோர்கள் அழைக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணைகளின் போது அம்மாணவர்கள் நான்குபேரும் போதை வில்லைகளை உற்கொண்டமை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான இளைஞனை கேகாலை நகரில் வைத்து பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.சந்தேக நபரை கேகாலை மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்ய நடவடிக்கடைுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நான்கு மாணவர்களது பெற்றோர்களும் கல்வி கற்றவர்கள் என்றும், கேகாலை நகரில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் என்றும் பின்னர் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.