புதிதாக கட்டிய வீட்டை பார்க்க சென்ற வர்த்தகருக்கு அதிர்ச்சி! மதில் மட்டுமே இருந்ததாம், பெண் ஒருவர் கைது..
வீடு ஒன்றை நிர்மாணித்து தருவதாக கூறி வர்த்தகர் ஒருவரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் வென்னப்புவ பகுதியில் வைத்து கொழும்பு மோசடி விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலக வர்த்தக மையத்தில் அலுவலகம் ஒன்றை நடத்திவரும் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள காணியை
சந்தேக நபரின் கணவரிடம் வீடு கட்டுவதற்காக கையளித்ததாகவும், அதற்காக சந்தேக நபரின் மனைவியின் கணக்கில் ஒரு தொகையை வரவு வைத்ததாகவும் வர்த்தகர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
குறித்த காணியை பார்வையிட்டபோது குறித்த வீட்டில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாதுகாப்புச் சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.