தமிழகத்தில் அதிக விலை விற்பனையில் 'வாரிசு'

ஆசிரியர் - Editor II
தமிழகத்தில் அதிக விலை விற்பனையில் 'வாரிசு'

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. 

இப்படத்தை தயாரித்த லலித்குமார் தமிழக வினியோக உரிமை வாங்கி வெளியிடுகிறார். மிகப் பெரும் விலைக்கு அவர் படத்தை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒட்டு மொத்த தமிழக உரிமையை வாங்கியுள்ளவர் அதை ஏரியா வாரியாக பிரித்து விற்பனை செய்து வருகிறார்.

முக்கியமாக ஏரியாக்களான சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, கோவை ஆகிய வினியோக ஏரியாக்களை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். இந்தப் பகுதிகளுக்கு எவ்வளவுக்கு விற்கப்பட்டுள்ளது என்ற தகவல் இன்னும் கசியவில்லை.

திருச்சி, திருநெல்வேலி ஏரியாக்களை எம்ஜி அடிப்படையில் சுமார் 11 கோடிக்கு விற்றுள்ளார்களாம். மதுரை ஏரியா உரிமை 8 கோடி, சேலம் ஏரியா உரிமை 6 கோடி என பேசி வருகிறார்களாம். இவ்வளவு விலை கொடுத்து வாங்க அந்த ஏரியா வினியோகஸ்தர்கள் தயங்கி வருவதாகத் தகவல். 

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு