கனடாவில் மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை!! -இலங்கை தமிழர் மீது விசாரணை ஆரம்பம்-

ஆசிரியர் - Editor II
கனடாவில் மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை!! -இலங்கை தமிழர் மீது விசாரணை ஆரம்பம்-

கனடாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியை வாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதான இலங்கை தமிழர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி சசிகரன் தனபாலசிங்கம் என்பவர் பிரிந்து வாழ்ந்து வந்த தன் மனைவி தர்ஷிகா ஜெகன்நாதன் என்பவரை வாளால் வெட்டி கொலை செய்திருந்தார்.

குறித்த பகுதியில் ஆண் ஒருவர் வாளுடன் பெண் ஒருவரைத் துரத்துவதாக கிடைத்த பல்வேறு முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு சென்ற போது, அந்தப் பெண் பலமுறை கத்தியால் வெட்டப்பட்டு படுபயங்கரமான காயங்களுடன் கிடந்த நிலையில் பின்னர் உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து சசிகரன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் ஒன்றாறியோ நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய, சசிகரன் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. சசிகரனுக்கும், தர்ஷிகாவுக்கும் நடந்தது நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும், அவர்களின் திருமணம் இந்தியாவில் நவம்பர் முதலாம் திகதி 2015 இல் நடந்துள்ளது.

2017 இல் தர்ஷிகா தனது கணவருடன் சேர்ந்து வாழ கனடாவுக்கு வந்து சில வாரங்களில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி சசிகரனால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு