ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு!! -தேசிய கீதத்தை பாடது புறக்கணித்த ஈரான் வீரர்கள்-

ஆசிரியர் - Editor II
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு!! -தேசிய கீதத்தை பாடது புறக்கணித்த ஈரான் வீரர்கள்-

ஈரானில் பெண்கள் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் நடித்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் பங்குபற்றிய ஈரான் அணியினர், ஆரம்பப் போட்டியின்போது தேசிய கீதத்தை பாடாமல் புறக்கணித்துள்ளனர். 

ஹிஜாப் உடைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி மாஷா அமினி (22 வயது), என்ற இளம்பெண் இறந்ததைத் தொடர்ந்து போராட்டம் வலுவடைந்துள்ளது.

பல்வேறு நகரங்களில் நடந்து வரும் போராட்டங்களால் ஈரான் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கும்  பொலிஸாருக்கும்   இடையில் இடம்பெற்ற மோதலில் இதுவரை 300க்கும் மெற்பட்டோர் பலியாகியுள்ளனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந் நிலையில் இங்கிலாந்துக்கும் ஈரானுக்கும் இடையிலான பி குழுவுக்கான உலகக் கிண்ண போட்டி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

தோஹா, கலிபா சர்வதேச விளையாட்டரங்கில் அப் போட்டி ஆரம்பமாவதற்கு சற்று முன்னர் இரண்டு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது.

ஈரானின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அந்நாட்டு வீரர்கள் யாரும் தேசிய கீதத்தை பாடாமல் மௌனம் சாதித்து ஹிஜாப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தமது ஆதரவை வெளியிட்டனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு