மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய நினைவு மண்டபம் நல்லுாரில் அங்குரார்ப்பணம்..

ஆசிரியர் - Editor I
மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய நினைவு மண்டபம் நல்லுாரில் அங்குரார்ப்பணம்..

யாழ்.நல்லுாரில் மாவீரர் நாளையொட்டி மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

அவை நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் 

யாழ் மாநகரசபையின் அனுமதிகளை பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. 

மாவீரரின் பெற்றோரால் ஈகைச் சுடரேற்றப்பட்டுகல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமானது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, 

கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு