நகைக்கடை உரிமையாளரின் முகத்தில் மிளகாய் துாள் வீசிவிட்டு 8 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளுடன் ஓடிய கொள்யைன்!
நகைக்கடை உரிமையாளரின் முகத்தில் மிளகாய் துாள் வீசிவிட்டு 8 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளுடன் தப்பி ஓடிய கொள்ளையன் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த சம்பவம் அக்குறஸ்ஸ நகரில் இடம்பெற்றுள்ளது. கொள்ளையனை துரத்திச் சென்றபோதும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளான். கொள்ளையன் நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கு முன்பு
நகரில் நடமாடிய காட்சிகள் சிசிரிவி கமெராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.