SuperTopAds

மதுபான விருந்தில் நடந்த பயங்கரம்! கம்பியால் அடித்தும், குத்தியும் கொல்லப்பட்ட குடும்பஸ்த்தர்..

ஆசிரியர் - Editor I
மதுபான விருந்தில் நடந்த பயங்கரம்! கம்பியால் அடித்தும், குத்தியும் கொல்லப்பட்ட குடும்பஸ்த்தர்..

மதுபான விருந்தில் இடம்பெற்ற வாய்த்தகராறில் 36 வயதான நபர் கம்பியால் அடித்தும், குத்தியும் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை நாகவில - ஆடிகம என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 

உயிரிழந்தவர் 36 வயதுடைய ஆடிகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.உயிரிழந்தவர் தனது வீட்டில் மற்றுமொரு குழுவினருடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது, ​​அந்த இடத்தில் இருந்த நபரே இந்தக் கொலையைச் செய்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.ச ம்பவம் நடந்த இடத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கம்பியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கொலையை செய்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Radio