SuperTopAds

என்னை ஏமாற்றிவிட்டார்!! -தயாரிப்பாளர் அலுவலகம் முன் நடிகை நிர்வாண போராட்டம்-

ஆசிரியர் - Editor II
என்னை ஏமாற்றிவிட்டார்!! -தயாரிப்பாளர் அலுவலகம் முன் நடிகை நிர்வாண போராட்டம்-

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிவித்து தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் வாசு அலுவலகம் முன் நடிகை ஒருவர் நிர்வாண போராட்டம் நடத்தியுள்ளார். 

தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான வாசு, பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்நிலையில், தயாரிப்பாளர் வாசு, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார் என்று என நடிகை சுனிதா போயோ என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாசுவின் அலுவலகம் முன், நேற்று ஞாயிற்றுக்கிழமை நிர்வாணமாக அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

நடிகையின் இந்தப் போராட்டம் காரணமாக, தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பிரபலங்கள் வசிக்கும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலும் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த பொலிஸார் நடிகை சுனிதாவுக்கு ஆடைகளை அணிவித்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார் தற்போது வெளியூரில் இருக்கும் வாசு ஹைதராபாத் வந்தவுடன் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், இதற்கு முன் சுனிதா பல முறை புகார் அளித்தும், வாசு மீது பொலிஸார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.