மில்லியன் டொலர் பரிசு போட்டியில் கோட்டா குறித்த கேள்வி!

ஆசிரியர் - Admin
மில்லியன் டொலர் பரிசு போட்டியில் கோட்டா குறித்த கேள்வி!

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ஏபிசி தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட ரியாலிட்டி போட்டியில் கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.     

மில்லியன் டொலர் பணப் பரிசை வெற்றிக்கொள்ளும் கேள்வி – பதில் ரியாலிட்டி போட்டியின், இறுதிச் சுற்றில் போட்டியாளர்களிடம் “2022ம் ஆண்டு மக்கள் போராட்டத்தினால், நாடொன்றின் ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

இந்திய பெருங்கடலின் மாலைத்தீவை நோக்கி அவர் பயணித்துள்ளார். இந்த ஜனாதிபதி எந்த நாட்டைச் சேர்ந்தவர்” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு, இரண்டு போட்டியாளர்கள் ”இலங்கை” என பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு