ஆலங்குளம் துயிலுமில்லத்தில் சிரமதானம்!

திருகோணமலை - சம்பூர் பகுதியில் உள்ள ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று காலை சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. சம்பூர் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இச்சிரமதானம் இடம்பெற்றது.
மாவீரர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.சிரமதானத்தில் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 27 ஆம் திகதி சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இச்சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.