SuperTopAds

ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த யாழ்.இந்துக்கல்லுாரி மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியர் - Editor I
ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த யாழ்.இந்துக்கல்லுாரி மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த பாடசாலை மாணவன் ஒருவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்.இந்துக்கல்லுாரியில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர் தாக்கியதாகவும் தாக்குதலில் மாணவன் தலையில் காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது. 

இது குறித்து மாணவன் தரப்பில் கூறப்பட்டதாவது, தடிகளால் மாணவனை தொடர்ச்சியாக தாக்கிய ஆசிரியர் தடி முறிந்த நிலையில் கையால் மாணவனின் நெற்றியில் அடித்ததாகவும் கூறினர். 

சம்பவம் தொடர்பாக யாழ் இந்து கல்லூரியின் அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த சம்பவம் தொடர்பில் தான் அறியவில்லை எனவும்,

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்தார்.