தனுஸ்கவுக்காக 150.000 டொலர்களை கொடுத்த அடையாளம் தெரியாத இலங்கை பெண்

ஆசிரியர் - Editor II
தனுஸ்கவுக்காக 150.000 டொலர்களை கொடுத்த அடையாளம் தெரியாத இலங்கை பெண்

அவுஸ்திரேலியா பெண் ஒருவர் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் தனுஸ்க குணதிலகவிற்கு அங்குள்ள இலங்கையை சேர்ந்த செல்வந்தர்கள் உதவிவழங்கிவருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஸ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் தான் தங்கியிருக்கும் முகவரியொன்றை பொலிஸாருக்கு வழங்கவேண்டும் என்பதால் அவரை தங்கள் வீட்டில் தங்கவைப்பதற்கு இலங்கையை சேர்ந்த பல செல்வந்தர்கள் முன்வந்துள்ளனர்.

தனுஸ்ககுணதிலகவின் பிணைக்கான 150.000 டொலர்களை  இலங்கையை  சேர்ந்த அடையாளம் தெரியாத பெண்ணொருவர் செலுத்தியுள்ளார். தனுஸ்கவிற்கும் குறிப்பிட்ட பெண்ணிற்கும் இடையிலான உறவு குறித்த எந்த விபரங்களும் வெளியாகவில்லை.

நேற்று வியாழக்கிழமை தனுஸ்ககுணதிலகவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை சிட்னியில் உள்ள பல செல்வந்தர்கள்  அவருக்கான செலவுகளை பொறுப்பேற்பதற்கு போட்டியிட்டுள்ளனர்.

மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்கள் தனுஸ்ககுணதிலக அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவரின் செலவுகளை பொறுப்பேற்க முன்வந்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு