SuperTopAds

திடீர் சுகயீனமடைந்த 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியர் - Editor I
திடீர் சுகயீனமடைந்த 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையில் திடீர் சுகயீனமடைந்த சுமார் 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் மாத்தளையில் உள்ள பெண்கள் கல்லுாரி ஒன்றில் இன்று செவ்வாய் கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகள் நேற்று திங்கட்கிழமை வென்னபுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் 

பங்குபற்றிதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக

 வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.