ரி-20 கிரிக்கெட் தரப்படுத்தல்!! -இலங்கைக்கு கிடைத்த இடம்-

ஆசிரியர் - Editor II
ரி-20 கிரிக்கெட் தரப்படுத்தல்!! -இலங்கைக்கு கிடைத்த இடம்-

ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பின்னர், அணிகளுக்கான தரப்படுத்தல் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை தற்போது வெளியிட்டுள்ளது. 

இதன்படி அந்த பட்டியலில் இந்திய அணி தொடர்ந்தும் 268 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் 265 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி உள்ளது. 

மூன்றாம் இடத்திலிருந்த தென் ஆபிரிக்க அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 4 ஆம் இடத்தில் உள்ளது. இதேவேளை, 4ஆம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி ஒரு இடம் முன்னேறி 258 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப்பட்டியலில், இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ந்தும் 8 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு