கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சிச் செய்தி
கனேடிய இராணுவத்தில் குறைந்த ஆட்சேர்ப்பு நிலை காணப்படுவதால் அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களும் அந்நாட்டின் இராணுவத்தில் சேரலாம் என்று அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் சுமார் 6 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்க இலக்கு வைக்கப்பட்ட நிலையில், அதில் அரைவாசி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கனடாவில் 10 ஆண்டுகளாக வசிக்கும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கனேடிய ஆயுதப் படைக்கு விண்ணப்பிக்க அனுமதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என அந்த நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது. தற்போது கனடா நாட்டின் குடிமக்களை போலவே 18 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்கள் இராணுவத்தில் எளிதில் சேரலாம். அதேபோல் 16 வயது நிரம்பியவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் இராணுவத்தில் இணையலாம்.
இராணுவத்தில் அதிகாரியாகும் எண்ணம் இருந்தால் அதற்குரிய கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும். கனடா இராணுவத்தின் இந்த அறிவிப்பால் இந்தியர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகின்றது.
ஏனெனில் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளனர். கனடாவுக்கு வரும் 5 வெளிநாட்டவர்களில் ஒருவர் இந்தியர் என புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.