SuperTopAds

காணிகளை அடையாளப்படுத்துவோருக்கு உதவ தயார்! ஆளுநர் ஜீவன் கூறுகிறார்..

ஆசிரியர் - Editor I
காணிகளை அடையாளப்படுத்துவோருக்கு உதவ தயார்! ஆளுநர் ஜீவன் கூறுகிறார்..

யாழ்.மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்து 749 தனியாருடைய காணிகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் ஏனையோர் தமது காணிகளை அடையாளப்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு உதவ ஆளுநர் செயலகம் தயாராக உள்ளதென ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்திலுள்ள தனியார் காணிகள் தொடர்பில் அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி அமைச்சு, காணி  ஆணையாளர் பொது அலுவலகம், நில அளவைத் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தற்போதைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அனைத்து துறையினரையும் உள்ளடக்கி ஆராயப்படும். 

கொழும்பு காணி ஆணையாளர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி அதிகாரிகளால் அனைத்து நில உரிமைகோருபவர்களையும் சந்தித்து, சம்பந்தப்பட்ட துறைகளுடன் தனிப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும். 

தனியார் நில உரிமைகோரல்கள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மாகாண காணி ஆணையர், உரிமை தீர்வு பிரிவு, ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து உரிமை கோரப்பட்ட அனைத்து தனியார் காணி உரிமையாளர்களின் விவரங்களையும் இவ்வருட இறுதிக்குள் மாவட்ட செயலாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட செயலாளர்களால் நில உரிமைகோரல்கள் 4 ஆயிரத்து 4 பதிவுகள் சரிபார்க்கப்பட்ட நிலையில் 2 ஆயிரத்து 749 உரிமையை உறுதிசெய்யப்பட்டது. மேலும் வனவளத்துறையினரிடம் காணப்படும் நிலங்களை உரிய முறையில் அடையாளம் கண்டு பொதுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.