நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அழைத்த கூட்டத்திற்கு செல்வதில்லை என தீர்மானமாம்! சில தமிழ் அரசியல் தரப்புக்கள்..
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் வீட்டில் தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளின் தலைவர்களை சந்திக்க ஒன்று கூடுமாறு சுமத்திரன் விடுத்த அழைப்பினை சில கட்சிகளின் தலைவர்கள் மறுத்துள்ளதாகவும், கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடிவில் இருப்பதாகத் தெரிய வருகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் உள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் ஒன்று கூடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொலைபேசியில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சித் தலைவர்களுக்கும் பிரிந்து சென்ற தலைவர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளாராம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திப்பதற்கு முன்னர் என்ன பேசுவது என்பது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கட்சித் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதற்கு முன்னர் தானாகவே ஊடகங்களுக்கு கடிதம் எழுதி அனுப்பிவிட்டதாக
பெயர் குறிப்பிடாத ஒரு கட்சியின் தலைவர் குற்றம் சாட்டினார். இன்னொரு கட்சியைச் சார்ந்தவர் கருத்து கூறுகையில் கூட்டமைப்பில் சுமந்திரன் என்ன பதவியில் இருக்கிறார் என்பது இதுவரை தனக்குத் தெரியாத நிலையில் சுமந்திரன் அழைத்து எவ்வாறு செல்வது என கூறினார்.
குறித்த அரசியல்வாதி மேலும் கூறுகையில் ஒரு ஊடக துறையைச் சார்ந்தவரும் சிலருக்கு தொலைபேசி மூலம் நீங்கள் கூட்டத்துக்குச் செல்லுங்கள் என கூறுகிறாராம். தமிழ் கூட்டமைப்பில் முகவரி இல்லாதவர்கள் அழைப்பு விடும் கூட்டங்களுக்கு தாங்கள் செல்ல மாட்டோம் என கூறும் சில தமிழ் கட்சிகளின் தலைவர்கள்
பாராளுமன்ற கட்டடத்தில் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடுவோம் எனத் தெரிவித்தனர்.