சம்பளத்திற்குப் பதிலாக காலை, மதியம், மாலையில் தலா ஒரு பைக்கெட் ஹேரோயின்! முதலாளியை மடக்கிய பொலிஸார்..
ஊழியர்களுக்கு தினமும் சம்பளமாக ஹெரோயின் போதைப் பொருளை வழங்கிவந்த முதலாளியை நவகமுவ பொலிஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் நவகமுவ பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர்.தோட்ட அலங்கார தொழிலில் ஈடுபட்டு வந்த இவரின் கீழ் 6 பேர் பணியாற்றி வந்தனர்.
அந்த தொழிலாளர்கள் போதைக்கு அடிமையானதால், அவர்களுக்கு காலை, பகல், மாலை என தலா ஒரு பக்கெற் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, பணம் கொடுத்தால் மறுநாள் வேலைக்கு வரமாட்டார்கள் என்பதால் ஹெராயின் பொதிகளை வழங்கியதாக
வாக்குமூலம் வழங்கியுள்ளார்.