தென்கொரியா சென்ற இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவியை காணவில்லை!!

ஆசிரியர் - Editor II
தென்கொரியா சென்ற இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவியை காணவில்லை!!

7 பேர் கொண்ட ஆசிய  ரக்பி போட்டியில் பங்கு கொள்வதற்காக தென்கொரியா சென்ற இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி துலானி பல்லேகொண்டகே இன்று திங்கட்கிழமை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் கலந்து கொண்ட பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரக்பி அணியின் முகாமையாளர், தனது அணியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் கொரிய ரக்பி சங்க அதிகாரிகள் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, இஞ்சியோனில் உள்ள நம்டோங் பொலிஸார் மகளிர் அணித் தலைவியை கண்டுபிடிக்க விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில், போட்டிகளில் கலந்து கொண்ட இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் ரக்பி அணிகள் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இன்சியான் விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு புறப்படவுள்ளன.

இலங்கை ரக்பி அணிகள் நாட்டை விட்டு வெளியேறும் முன் துலானியை கண்டுபிடிக்க தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வோம் என தென் கொரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு