ரி-20 உலக கிண்ணத்தை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா?

ஆசிரியர் - Editor II
ரி-20 உலக கிண்ணத்தை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா?

ரி-20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றும் அணிக்கு வழங்கப்படவுள்ள மிகப் பெரும் பரிசுத் தொகை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வரும் ரி-20 உலக கோப்பை போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இதில் ஜாஸ்பட்லர் தலைமையிலான இங்கிலாந்து - பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகள் ஏற்கனவே ஒருமுறை ரி-20 உலக கோப்பையை வென்றுள்ளன.

இங்கிலாந்து அணி 2010 ஆம் ஆண்டும், பாகிஸ்தான் அணி 2009 ஆம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்றன. இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை மழை பெய்தால் போட்டி நாளை நடத்தப்படும்.

ரி-20 உலக கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 12.88 கோடி (1.6 மில்லியன் அமெரிக்க டொலர்) பரிசு தொகை வழங்கப்படும். 2 ஆவது இடத்துக்கு 6.44 கோடி பரிசு தொகை கிடைக்கும்.

அரை இறுதியில் தோல்வியை தழுவிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு தலா 3.22 கோடி கிடைக்கும். சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய மற்ற 8 அணிகளுக்கு தலா 56.73 இலட்சம் பரிசு தொகை வழங்கப்படும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு