யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ்.மாவட்டச் செயலகம்வரை விழிப்புணர்வு நடைபவனி..
சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு நாளை திங்கள் கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ்.மாவட்டச் செயலகம்வரை விழிப்புணர்வு நடைபவனி இடம்பெறவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவ்வாறு அறிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது நீரிழிவு நோய் தொடர்பில் விழிப்புணர்வுகள் செயற் படுத்தப்படுகின்றன.
அதனுடைய ஓர் அங்கமாக சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு நாளைய தினம் திங்கட்கிழமை காலை 7 மணி வைத்தியசாலையில் இருந்து
யாழ் மாவட்ட செயலகம் வரை ஒரு விழிப்புணர்வு பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.