SuperTopAds

மும்பை அணியில் இருந்து பொல்லார்ட் உள்பட 4 முக்கிய வீரர்கள் விடுவிப்பு

ஆசிரியர் - Editor II
மும்பை அணியில் இருந்து பொல்லார்ட் உள்பட 4 முக்கிய வீரர்கள் விடுவிப்பு

நடைபெறவுள்ள ஜ.பி.எல் ரி-20 தொடரருக்கான மும்பை அணியில் இருந்து பொல்லார்ட் உள்பட 4 முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஐ.பி.எல் ஏலத்திற்காக மும்பை அணியில் இருந்து முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வரும் டிசெம்பர் 23 ஆம் திகதி புதன்கிழமை கொச்சியில் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு விருப்பமில்லாத வீரர்களை விடுவிக்கும். அந்தவகையில் வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்குள் அனைத்து அணிகளும் விடுவிக்கவுள்ள வீரர்கள் பட்டியலை சமர்பிக்க வேண்டும் என கூறியிருந்தது. எனவே தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தனது பட்டியலை இறுதி செய்து அனுப்பிவிட்டது.

மும்பை அணியில் மொத்தம் 10 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 5 வீரர்கள் ஏலத்தில் விடுவிக்கப்பட்டனர். இதில் மும்பை அணியின் மிக முக்கிய வீரரான பொல்லார்ட்டும் ஒருவர் என்பது தான் தற்போது அதிர்ச்சி தகவல். 2010 ஆம் ஆண்டு முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் பொல்லார்ட் தற்போது திடீரென நீக்கப்பட்டிருக்கிறார்.

5 முறை சாம்பியனான மும்பை அணி கடந்த சீசனில் 10 ஆவது இடத்தை பிடித்து மோசமாக வெளியேறியது. இதில் பொல்லார்ட் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 144 ஓட்டங்களை மட்டுமே அடித்தார். பந்துவீச்சிலும் அவர் 6 போட்டிகளில் 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

35 வயதாகும் அவரை பெரிய தொகைக்கு வைத்திருக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர். பொல்லார்ட் மட்டுமின்றி மேலும் 4 நட்சத்திர வீரர்களான பெபியன் ஆலன், டைமல் மில்ஸ், மயங்க் மார்காண்டே, ஹிர்திக் சௌக்கின் ஆகிய 4 பேரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட 10 பேர் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.