யாழ்.உரும்பிராய் - பொக்கணை பகுதியில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு தேடுதல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராய் - பொக்கணை பகுதியில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு தேடுதல்..!

யாழ்.உரும்பிராய் - பொக்கணை பகுதியில் கோப்பாய் பொலிஸாரினால் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

குறித்த பகுதியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி ஆகியன இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், 

வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் 

நேற்றைய தினம் மேற்படி திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. சுற்றி வளைப்பின்போது ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 

24 போத்தல் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு