யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 221 குடும்பங்களை சேர்ந்த 733 பேர் பாதிப்பு!
யாழ்.மாவட்டத்தில் தொடரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் சுமார் 221 குடும்பங்களை சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் டி.என்.சூரியராஜா கூறியுள்ளார்.
மேலும் 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர்நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
சீரற்ற காலநிலை காரணமாகநேற்று மாலை முதல் யாழ்.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ததன் காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேரும்
யாழ்.பிரதேச செயலகப் பிரிவில்25 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும்மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும் கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் தங்க வைக்கபட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.