SuperTopAds

அதை மட்டும் செய்யமாட்டோம்! மீட்கப்பட்ட இலங்கையர்கள் திட்டவட்டம், முன்னாள் போராளிகள் கடும் அச்சத்தில்..

ஆசிரியர் - Editor I
அதை மட்டும் செய்யமாட்டோம்! மீட்கப்பட்ட இலங்கையர்கள் திட்டவட்டம், முன்னாள் போராளிகள் கடும் அச்சத்தில்..

கனடாவுக்கு கடல்மார்க்கமாக சென்றபோது தென் சீன கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தாங்கள் நாடு திரும்ப விரும்பவில்லை. என திட்டவட்டமாக தங்கள் பக்க நியாயத்தை தொவித்திருக்கின்றனர். 

வியட்நாம் நாட்டில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 அகதிகளில் பெரும்பாலானோர் தமது நிலைப்பாட்டை அந்நாட்டு அதிகாரிகளுக்கு நேற்று தெரியப்படுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில் கனடாவுக்குச் செல்வதே தமது நோக்கமென்றும் குறிப்பிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் பிரதி நிதிகளிடமும் இந்த விடயத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இலங்கையிலிருந்து அகதிகளாகச் சென்றோரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இருப்பதால் நாட்டில் மிகக் கடுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அஞ்சுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உயிர்வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அகதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தாம் மீண்டும் நாடுகடத்தப்பட்டால் நீண்டகால விசாரணைகள், 

தடுப்புக்காவல் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும் என அஞ்சுவதாக அவர்கள் ஐ.நா. முகவர்களிடம் தெரிவித்துள்ளதாக அறியமுடிந்தது.