SuperTopAds

இலங்கையில் குரங்கம்மை அபாயம் தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் குரங்கம்மை அபாயம் தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு..!

நாட்டில் குரங்கம்மை தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் அச்சப்படத் தேசவையில்லை. என கூறியுள்ள சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.  

இரு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டபோதும் இது ஒரு தொற்றுநோய்க்கான ஆரம்பம் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டுபாயைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது நேற்று (09) கண்டறியப்பட்டது, இதுவரை இலங்கையில் இரண்டு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.