கணவனால் அடித்துக் கொல்லப்பட்ட வங்கி முகாமையாளரான மனைவி! கணவன் தலைமறைவு..
கணவனின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு இலக்கான மனைவி உயிரிழந்த சம்பவம் ஹக்மன என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் ஹக்மன கெபிலியபொலயா தெற்கு சனச வங்கிய வங்கியின் முகாமையாளராக பணியாற்றிவருகின்றார்.
கணவனின் தாக்குதலினால் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்களுக்குள்ளான அவர், பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு
ஹக்மன கங்கோடாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.