மேலதிக வகுப்புகளுக்கு போவதாக கூறிவிட்டு விடுதியில் தங்கி உல்லாசம்! 3 ஜோடிகளுக்கு பொலிஸார் செய்த தரமான சம்பவம்..
மேலதிக வகுப்புக்களுக்கு செல்வதாக கூறி வீடுகளில் இருந்து வெளியேறி விடுதியில் உல்லாசமாக தங்கியிருந்த 3 ஜோடிகளை கைது செய்த பொலிஸார் பெற்றோரை நோில் அழைத்து கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குளியாப்பிட்டிய நீதவானிடம் இருந்து
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தேடுதல் உத்தரவுக்கு அமைய குறித்த விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த 3 இளம் ஜோடிகளும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த தேடுதல்களின்போது விபசாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். பின்னர், குறித்த இளம் ஜோடிகளின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு,
கடுமையாக எச்சரித்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும், இளம் ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த விடுதிக்கு பொலிஸார் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.