விபத்தில் உயிரிழந்த பிச்சைக்காரனின் பையில் 1 லட்சது 35 ஆயிரம் பணம், 5 வங்கி புத்தகங்கள் மீட்பு!
விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பிச்சைக்காரர் ஒருவரிடமிருந்து 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிச்சைக்காரரின் பெயரில் இருந்து 5 வங்கி புத்தகங்களும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் சிலாபம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த சனிக்கிழமை கதிரேசன் பாலமுருகன் (வயது 49) என்ற பிச்சைக்காரர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் காயமடைந்த அவர் சிலாபம் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரது பையை சோதனை செய்தபோது ரூ.135,000 பணம் மற்றும் ரூ.47,000 மதிப்புள்ள 05 வங்கி கணக்கு புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
விபத்து தொடர்பான விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.