முதல் அரை இறுதி போட்டி!! நியூசிலாந்து - பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை

ஆசிரியர் - Editor II
முதல் அரை இறுதி போட்டி!! நியூசிலாந்து - பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை

அவுஸ்ரேலியாவில் நடைபெற்றுவரும் ரி-20 உலக கிண்ணத்திற்கான முதல் அரை இறுதிப் போட்டியில் நாளை புதன்கிழமை நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இத் தொடரின் சூப்பர் 12 சுற்று நேற்று முன்தினம் முடிவடைந்தன. இதன் முடிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. 

இந்நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் அரை இறுதி ஆட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது. சிட்னியில் புதன்கிழமை நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் குரூப் 1 பிரிவில் முதல் இடத்தை பிடித்த நியூசிலாந்து -குரூப் 2 பிரிவில் 2 ஆவது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. பாபர்அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3 ஆவது தடவையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. 

இருக்கிறது. அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருந்தது. இதில் 2009-ல் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2007-ல் இந்தியாவிடம் தோற்று இருந்தது.

இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக கடந்த மாதம் 14 ஆம் திகதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இறுதிப் போட்டிக்குள் நுழைய நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் கடுமையாக போராடும் என்பதால் நாளைய அரை இறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு