குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கும் தனுஷ்க!! -உயர் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் கோர முடிவு-

ஆசிரியர் - Editor II
குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கும் தனுஷ்க!! -உயர் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் கோர முடிவு-

அவுஸ்ரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்புணர்ந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் அவருக்கான பிணை மறுக்கப்பட்டுள்ளதால் அவர் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள சில்வவோட்டர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனுஷ்கவின் வெளிநாட்டு கடவுச்சீட்டை அந்நாட்டு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் 10 முதல் 12 மாதங்கள் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சிட்னி கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதான பெண்ணொருவரால் தனுஷ்க பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கடந்த சனிக்கிழமை அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட தனுஷ்க குணதிலக மீது பொலிஸாரால் 4 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் 2 ஆவது முறையாக தனுஷ்க குணதிலக, சிட்னி பொலிஸாரால் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார். இதன்படி, டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதவான் றொபர்ட் வில்லியம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனுஷ்க சார்பில் சட்டத்தரணி ஆனந்த அமர்நாத் பிணை கோரியிருந்தார்.

இருப்பினும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் அண்மைக்காலமாக கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் வெளிநாட்டவர் என்பதால் தனுஷ்கவிற்கு பிணை வழங்க நீதவான் மறுத்துள்ளார்.இந்நிலையில், தனுஷ்க 05 நாட்களுக்கு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பில் உயர் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்யவுள்ளதாக தனுஷ்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு