கமல் பிறந்தநாளில் வெளியான 'இந்தியன் 2' போஸ்டர்

ஆசிரியர் - Editor II
கமல் பிறந்தநாளில் வெளியான 'இந்தியன் 2' போஸ்டர்

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு 'இந்தியன் 2' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றைபடக்குழு இன்று திங்கட்கிழமை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டு, 'நீங்கள் எங்கள் பொக்கிஷம், பன்முகத் திறமை கொண்ட கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் 'விக்ரம்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது 'இந்தியன் 2' படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு