வங்கி கணக்கில் திடீரென வைப்பிலிடப்பட்ட 10 கோடி ரூபா!! -கோடீசுவரரான காவல் அதிகாரி-

ஆசிரியர் - Editor II
வங்கி கணக்கில் திடீரென வைப்பிலிடப்பட்ட 10 கோடி ரூபா!! -கோடீசுவரரான காவல் அதிகாரி-

பாகிஸ்தானில் உள்ள காவல் அதிகாரி ஒருவரின் வங்கி கணக்கில் மாதாந்த ஊதியத்துடன் 10 கோடி ரூபா சேர்த்து வைப்பிடப்பட்டுள்ளதாக அவர் திடீர் கோடீஸ்வரனாக மாறியுள்ளார். 

இருப்பினும் அவரின் கோடீஸ்வர மகிழ்ச்சி வாழ்க்கை சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டின் கராச்சி நகரில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரியாக பணியாற்றி வந்த ஆமீர் கோபங் என்பவர் வங்கி கணக்கில் மாதாந்த ஊதியத்துடன் அடையாளம் தெரியாத வகையில் 10 கோடி ரூபா சேர்த்து வைப்பிடப்பட்டது. இருப்பினும் இது தொடர்பில் அவர் அறியவில்லை.

திடீரென வங்கியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பேசியவரிடம், உங்களது வங்கி கணக்கில் 10 கோடி ரூபா விழுந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனார். இருப்பினும் எனினும், அவரது மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. உடனடியாக தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்பு, கோபங் ஏதேனும் செயல்படுவதற்கு முன் வங்கி அதிரடியாக அவரது கணக்கை முடக்கியது. 

அவரது ஏ.டி.எம். அட்டையையும் பணம் எடுக்க முடியாதபடிக்கு முடக்கி விட்டது. காவல் அதிகாரியின் வங்கி கணக்கில் எப்படி, எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என விசாரணை ஆரம்பமாகியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு