ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை விற்பனை செய்தது உண்மையே!! -ஒப்புக்கொண்டது ஈரான்-
உக்ரைன் நாட்டின் மீது படையெடுப்பதற்கு முன்பு ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை விற்பனை செய்ததாக ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.
இருப்பினும் இந்த விற்பனை ரஷ்யாவின் படையெடுப்பை இலக்காகக் கொள்ளவில்லை என்று ஈரான் அதிகாரிகள் மேலும் தகவல் கூறியுள்ளது.
சர்வதேச சட்டங்களை மீறி ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை வழங்கியதாக பல தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவர்கள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இதற்கிடையில், யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தனது படைகள் நாளொன்றுக்கு குறைந்தது 10 ஈரானிய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தும் என்று கூறியிருந்தார்.