வங்காளதேஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி!! -அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்-

ஆசிரியர் - Editor II
வங்காளதேஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி!! -அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்-

சூப்பர் 12 சுற்றில் வங்களாதேஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி.

சூப்பர் 12 சுற்றில் நாணயசுழல்ச்சியில் பெற்றி பெற்ற வங்களாதேஸ் அணி பாகிஸ்தானுக்கு எதிராக துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. நெதர்லாந்து அணியின் அதிர்ச்சி வெற்றியால் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பினை இழந்தது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். இதனால் இந்தப் போட்டி மிக முக்கியமானது. 

வங்களாதேஸ் அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷண்டோ 54, சௌமியா சர்கார் 20, ஹொசைன் 24 ஓட்டங்களை பெற்றனர். 

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியிஜ் தொடக்க வீரர்கள் பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் பொறுப்பான தொடக்கத்தை அளித்தனர். 10 ஓவர் வரை விக்கெட்டை பறி கொடுக்காமல் விளையாடினர். பாபர் ஆஸம் 32 ஓட்டங்களும், ரிஸ்வான் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மொஹமது ஹாரிஸ் சிறப்பாக விளையாடி 18 பந்துகளுக்கு 31 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

18.1 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் பி-யில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு