இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!! -வெளியேறியது அஸ்திரேலியா-

ஆசிரியர் - Editor II
இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!! -வெளியேறியது அஸ்திரேலியா-

இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம் ஓட்ட சராசரி முறையில் அவுஸ்ரேலியா அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியது.

ரி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதி சுற்று லீக் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. 

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை பெற்றது. அதிகப்பட்சமாக நிசங்கா 67 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதனையடுத்து 142 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 74 ஓட்டங்கள் குவித்தது. இருப்பினும் ஆனால் 75 ஓட்டத்தில் முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி 111 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனையடுத்து ஸ்டோக்ஸ் - சாம் கரன் ஜோடி நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். சாம் கரன் 6 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 12 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுக்க வேண்டியது நிலையில் கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது.

இறுதுp ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 44 ஓட்டங்கள் பெற்றார். 

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அவுஸ்ரேலியா அணி உலககோப்பையில் இருந்து வெளியேறியது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு