தகவர்ந்தது தென்னாபிரிக்கா அணியின் அரையிறு கனவு!!

ஆசிரியர் - Editor II
தகவர்ந்தது தென்னாபிரிக்கா அணியின் அரையிறு கனவு!!

நெதர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவிக் கொண்ட தென்னாபிரிக்கா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பினையும் நழுவவிட்டுள்ளது. 

ரி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில் லீக் ஆட்டத்தில் தென்னாபரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதின. நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணி இப் போட்டியில் நெதர்லாந்தை தோற்கடித்தால் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கும். நெதர்லாந்து அணியின் அரை இறுதி வாய்ப்பு ஏற்கனவே முடிந்து போய் விட்டது. 

அதன்படி, நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றது. ஆக்கர்மேன் 41 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காது இருந்தார். 

இதையடுத்து, 159 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தின் இறுதியில், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில், நெதர்லாந்து அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு