SuperTopAds

பணம் கேட்டு தொந்தரவு செய்த போதைக்கு அடிமையான மகன்! கோடரியால் வெட்டி கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த தந்தை..

ஆசிரியர் - Editor I
பணம் கேட்டு தொந்தரவு செய்த போதைக்கு அடிமையான மகன்! கோடரியால் வெட்டி கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த தந்தை..

வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு தாய், தந்தையை தொந்தரவு செய்த போதைக்கு அடிமையான மகனை கோடரியால் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை குருநாகல் - ரிதிகம உடலுபொல பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 29 வயதுடைய இளைஞன் உறங்கிக் கொண்டிருந்தபோது, குறித்த இளைஞரின் தந்தை தனது மகனை கோடரியால் தாக்கிக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த தந்தை பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ரிதிகம பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்