SuperTopAds

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தண்டணை வழங்க தீர்மானித்துள்ளதா பெற்றோலிய கூட்டுத்தாபனம்?

ஆசிரியர் - Editor I
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தண்டணை வழங்க தீர்மானித்துள்ளதா பெற்றோலிய கூட்டுத்தாபனம்?

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தண்டணையாக 3 நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது. என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளும் காணப்பட்டன.

இந்த தண்டனை நடவடிக்கை காரணமாக வாடிக்கையாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் தீர்மானங்களே இந்த நிலைமையை உருவாக்கியதாக தெரிவித்தார்.